நோக்கம்
தமிழ்நாட்டில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு தகுந்த உதவி புரிவதில் உறுதியுடன் செயல்படும் நம்பகமான நிறுவனமாக உருவெடுத்தல்

குறிக்கோள்
- வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு திட்டங்கள் மற்றும் செயல்முறைகளை தொடர்ந்து உருவாக்குதல்.
- மாநிலத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பொருத்தமான சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது.
- குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன சூழலில் உள்ள பிற பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் நிறுவனத்தின் துறைசார் அறிவினை பெருக்குதல்
குறிக்கோள்
- நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் , குறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய பெரு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சென்றடையும் பொருட்டு புதிய வாய்ப்புகளை கண்டறிதல்.
- மாநிலத்தில் காலக் கடன் பெறுவதற்கு மிகவும் உகந்த நிதி நிறுவனமாக மாறுதல்.
தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான முதல் மாநில நிதி நிறுவனமாக 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் துவங்கப்பட்டது. இக்கழகத்தால் நிதியுதவி பெற்ற பல புதிய நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக்கண்டுள்ளது.
மேலும் நிலம், இயந்திரங்கள் வாங்க மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் இக்கழகம் நிதியுதவி வழங்குகிறது. புதிய நிறுவனங்கள் துவங்குதல் / விரிவாக்கம் செய்தல்/ நவீனமயமாக்குதல்/பண்முகபடுத்துதல் போன்ற காரணங்களுக்காக நிதியுதவி வழங்குகிறது. உற்பத்தித் துறை மற்றும் தகுதி யுள்ள சேவை சார் நிறுவனங்கள் முதலியவற்றிற்கு இக்கழகம் நிதியுதவி அளித்து வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் இக்கழகம் முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகத்தின் மொத்த நிதியுதவியில் 90 விழுக்காடு நிதியுதவியினை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 40 விழுக்காடு நிதியுதவி, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு இக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கொண்ட குழுமத்தால் இக்கழகம் சிறந்த முறையில் வழி நடத்தப்படுகிறது.
இக்கழகம் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளாக லாபத்தில் இயங்குகிறது. இக்கழகம் 31.3.2019 வரை 1,23,544 நிறுவனங்களுக்கு ரூபாய் 17,281 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.


இயக்குநர் குழுமம்
